திருச்சி முக்கொம்பு காவிரி மேலணையில் 2 மதகுகளின் எதிர் எடைகள் உடைந்து சேதமடைந் தன. அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 2018 ஆக.22-ம் தேதி 9 மதகுகள் உடைந்து சேதமடைந்தன. அதற் குப் பதிலாக புதிய மேலணை கட்டும் பணி தற்போது நிறைவடை யும் நிலையில் உள்ளது.
இதனிடையே, முக்கொம்பு காவிரி மேலணையில் உள்ள 41 மதகுகளில், 15 மதகுகளின் வழியாக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதில், தற்போது தண்ணீர் திறக்கப்படாத 4, 15 ஆகிய மதகுகளின் கான்கிரீட் எதிர் எடைகள்(counter weight) நேற்று முன்தினம் உடைந்து சேதமடைந்தன. இதையடுத்து, அதைச் சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘முக்கொம்பில் காவிரி மேல ணையில் 2 மதகுகளின் கான்கிரீட்டால் ஆன எதிர் எடை உடைந்திருப்பது தெரியவந்தது. தற்போது, அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இத னால், உடைந்த கான்கிரீட் எதிர் எடைகளுக்குப் பதிலாக இரும்பாலான எதிர் எடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது’’ என்றனர்.