தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மறவக்காட்டில் வாய்க்காலில் மின்சார கம்பி அறுந்து கிடந்தால் மின்சாரம் பாய்ந்து மாரியப்பன் மகன்கள் தினேஷ் மற்றும் கவுதம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நிவாரணமாக தலா 5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
பின்னர், திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூரில் தனியார் பேருந்து மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 4 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் இழப்பீடு தொகையாக தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலைகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் வழங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
ஆட்சியர் ம.கோவிந்தராவ், எம்எல்ஏக்கள் சி.வி.சேகர், எம்.கோவிந்தராசு, முன்னாள் எம்எல்ஏக்கள் எம்.ரத்தினசாமி, எம்.ஜி.எம். சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர். பாலசந்தர், கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.