தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிரு ப்புகள், விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாயினர்.
கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை மற்றும் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் பெருக்கு ஏற்பட்டது.நேற்று முன்தினம் நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அணையை தாண்டி 80 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.
சாலைகள் துண்டிப்பு
இதேபோல் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் ஆதிச்சநல்லூர் அருகே புளியங்குளம் பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 2 நாட்களாக அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வாகனங்கள் கொங்கராயக்குறிச்சி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
குடியிருப்புகள் முழ்கின
வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தை ஒட்டியுள்ள அகரம் கிராமத்து க்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகரத்துக்கு செல்லும் சாலை, கருங்குளம்- ராமானுஜம்புதூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கொங்கராயகுறிச்சி, ஆழ்வார் தோப்பு, ஆழ்வார்திருநகரி, சிவராம மங்கலம், முக்காணி, பழையகாயல், புன்னக்காயல், ஆத்தூர் உள்ளிட்ட தாமிரபரணி கரையோர பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தாமிரபரணி கரையோர பகுதிகளில் மட்டும் 12 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 1,500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
பயிர்கள் சேதம்
இந்நிலையில் அணைகளின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் உபரநீர் வெளியேற்றம் படிப்படியாக குறைந்துள்ளது.
மேலும், மழையும் சற்று குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நேற்று காலை முதல் படிப்படியாக குறையத் தொடகியுள்ளது. நேற்று காலை 10 மணி நிலவரப்படி வைகுண்டம் அணையை தாண்டி தாமிரபரணி ஆற்றில் 53,000 கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடிய நிலையில், மாலை 4 மணிக்கு 44 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
அமைச்சர் ஆய்வு
மேலும், ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தாமிரபரணி கரையோர பகுதிகளையும், எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.
மழை அளவு