கோவை பூம்புகார் நிறுவனத்தில் நடைபெறும் பொங்கல் கண்காட்சியில் வைக்கப் பட்டுள்ள பொருட்களைப் பார்வையிட்ட பொதுமக்கள். படம்: ஜெ.மனோகரன் 
Regional01

பூம்புகார் நிறுவனத்தில் பொங்கல் கண்காட்சி

செய்திப்பிரிவு

கோவை பெரியகடைவீதியில் உள்ள பூம்புகார் நிறுவனத்தில் பொங்கல் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கிளை மேலாளர் கி.ரொனால்டு செல்வஸ்டின் கூறும்போது, "இக்கண்காட்சியில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தயாரிக்கப் பட்ட மண் பானைகள், வெண்கலப் பானைகள், ஓவியங்கள், உலோகப்பரிசுப் பொருட்கள், தஞ்சை ஓவியங்கள், பித்தளை மற்றும் மர பரிசுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். பொங் கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.10 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் பிப். 2-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறும்" என்றார்.

SCROLL FOR NEXT