Regional04

மனைவிக்கு கத்திக்குத்து கணவர் தலைமறைவு

செய்திப்பிரிவு

பல்லடம் அருகே குடும்பப் பிரச்சினையில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட மாதப்பூரை சேர்ந்தவர் சங்கர் (32). இவரது மனைவி பானுப்பிரியா (28). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் வெளியூரில் உள்ள நிலையில், கூலி வேலைக்குச் சென்று தம்பதி பிழைப்பு நடத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக தம்பதியிடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டதால், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் சங்கர் குத்திவிட்டு தப்பியோடினார். அப்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர், பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சங்கரை தேடி வருகின்றனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT