Regional02

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பரமக்குடி இளைஞர்களிடம் ரூ.28.40 லட்சம் முறைகேடு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது கனி(35).

இவர் 2019-ல் ஆன்லைன் மூலம் கிடைத்த தகவலின்பேரில், ஹரியாணாவைச் சேர்ந்த ரஞ்சித் சிங் என்பவரைத் தொடர்பு கொண்டார். ரஞ்சித்சிங் அயர்லாந்து நாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய செய்யது கனியும், அவரது நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து பல்வேறு தவணைகளில் ரூ.28.40 லட்சத்தைக் கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களை ரஞ்சித்சிங் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பவில்லை. பணத் தையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து கடந்த 12-ம் தேதி செய்யதுகனி உட்பட 7 பேர், காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் ரஞ்சித் சிங் மீது மாவட்டக் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT