Regional02

ராமநாதபுரத்தில் சிலம்பாட்டப் போட்டிகள்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் டி.டி.விநாயகர் தொடக்கப் பள்ளியில் நேரு யுவகேந்திரா மற்றும் மாவட்ட சிலம்பாட்ட இளைஞர் சங்கம், ஆயிரவைசிய மகா சபை ஆகியவை இணைந்து, தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு சிலம்பாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியை ஆயிர வைசிய கல்வி கமிட்டித் தலைவர் மோகன் தொடங்கி வைத்தார். டி.டி.விநாயகர் தொடக்கப் பள்ளித் தாளாளர் வெங்கடாச்சலம், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நோமன் அக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று நடைபெற்ற போட்டியில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டச் சிலம்பாட்ட இளைஞர் சங்க நிர்வாகி லோகசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் போட்டி ஏற்பாடுகளை செய்தனர்.

ராமநாதபுரம் அரண்மனைச் சாலையில் உள்ள ஸ்தூபியில் வார வழிபாட்டுக் குழு சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் தேசியச் செயலர் எல்.முத்துராமலிங்கம் தலைமையில் மாவட்ட அமைப் பாளர் தீனதயாளன் முன்னிலையில், ஏராள மானோர் மலர்தூவினர். நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண தபோவனம் தாயுமானவர் சுவாமி கோயில் ருத்தானந்தர் கலந்து கொண்டார். ராமநாதபுரம் அருகே நாகாச்சி ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் மடத்தின் தலைவர் சுதபானந்தர் தலைமையில் காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

SCROLL FOR NEXT