Regional01

சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில்ரூ.1.46 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

செய்திப்பிரிவு

போகி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை ரூ.1.46 கோடிக்கு விற்பனையானது.

போகிப் பண்டிகை தினமான நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இதனால், உழவர் சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. உழவர் சந்தைகளில் அதிகபட்சமாக சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் ரூ.24.61 லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது.

ஆத்தூர் உழவர் சந்தையில் ரூ.20.09 லட்சத்துக்கும், தாதகாப்பட்டியில் ரூ.15.27 லட்சத்துக்கும், மேட்டூரில் ரூ.8.91 லட்சத்துக்கும், அஸ்தம்பட்டியில் ரூ.7.95 லட்சத்துக்கும், அம்மாப்பேட்டையில் ரூ.6.47 லட்சத்துக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது.

மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று 295.241 டன் காய்கறிகள், 41.566 டன் பழங்கள் விற்பனையானது. காய்கறிகள் வாங்க 76,385 பேர் வந்திருந்தனர்.

SCROLL FOR NEXT