பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை பெரியமாரியம்மன் கோயிலில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன். அடுத்த படம்: கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பக்தர்கள். 
Regional02

பெரிய மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி பழையபேட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாகக் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு பெண்கள் மாரியம்மன் கோயில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து இளைஞர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT