Regional02

குருபரப்பள்ளியில் மணல் கடத்தல் லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் ரஜினி மற்றும் போலீஸார், வசந்தப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஏரியில் சிலர் மணல் திருடிக் கொண்டிருந்தனர். போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் வாகனங்களை விட்டுவிட்டு தப்பியோடினர்.இதையடுத்து, அங்கிருந்த லாரி, ஜேசிபி இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், தப்பியோடிய ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT