புதுக்கோட்டையில் சுப்பிரமணியபுரம், கலீப் நகர் பகுதியில் புதை சாக்கடைக்கான குழாய் உடைந்து மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் திமுக நகரச் செயலாளர் கே.நைனாமுகமது தலைமையில் அக்கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.