Regional01

நெல்லை குறைதீர் முகாமில் 145 மனுக்களுக்கு தீர்வு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், சாலை வசதி, பாதாள சாக்கடை மற்றும் பொது சுகாதாரம் குறித்தும், சொத்துவரி, காலிமனை வரி விதித்தல், பெயர் மாற்றம் செய்தல், கட்டிட அனுமதி, புதிய குடிநீர் குழாய் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றுகள் முதலான சேவைப்பணிகள் குறித்தும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று அவற்றுக்கு தீர்வு காண

4 மண்டலங்களிலும் செவ்வாய்கிழமைதோறும் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அந்தந்த மண்டல உதவி ஆணையர் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற முகாமில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, உரிய ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT