Regional01

மக்கள் தேசம் கட்சி ஆலோசனைக் கூட்டம்

செய்திப்பிரிவு

சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் முருகன், நகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் திருமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், “பறையர் இன மக்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகி இரட்டை மலை சீனிவாசனின் உருவப் படத்தை சட்டப்பேரவையில் நிறுவ வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT