Regional01

கடலூர் பகுதியில் சாராயம் விற்ற 4 பேர் கைது

செய்திப்பிரிவு

கடலூர் பகுதியில் சாராயம் விற்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தாரகேஸ்வரி தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம், வண்டிக்குப்பத்தைச் சேர்ந்த அம்புஜம்(70),ரேணுகா(60) ஆகியோரது வீட்டில்தலா 60 லிட்டர் புதுச்சேரி சாராயத்தை பறிமுதல் செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். கிழக்கு ராமபுரம் சுடுகாட்டு பகுதியில் காரைக்காட்டை சேர்ந்த செந்தில்குமார்(23), கடலூர் குண்டு சாலையில் பைக்கில் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்த கடலூர் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இருவரிடமும் தலா 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சிலம்பரசனின் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT