மரக்காணம் அருகே கைப்பானி குப்பம் அருகே வந்த வாகனங்களை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். 
Regional02

மரக்காணத்தில் போலீஸார் தீவிரவாதிகள் தடுப்பு ஒத்திகை

செய்திப்பிரிவு

மரக்காணம் அருகே உள்ள அனைத்து மீனவர் பகுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையிலான போலீஸார் ”சீவிகல் 21” என்ற தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை மேற்கொண்டனர்.

இதையொட்டி நேற்று இவ் வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கடலோரக்காவல் படையுடன் இணைந்து கடல்வழியாக யாராவது சந்தேகப் படும் படியான நபர்கள் வருகின்றார்களா என்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரையோரம் சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் அவர்களை பற்றி உடனடியாக அருகில்இருக்கும் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவேண்டும் என் றும் போலீஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

SCROLL FOR NEXT