Regional02

அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பெண்களை ஆபாசமாக பேசியதாகக் கூறி அதிமுக மகளிர் அணியினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் திராவிடராணி, மாவட்ட துணைச் செயலாளர் நாகராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலையப் பேச்சாளர் சாந்தி பேசினார். பெண்களை ஆபாசமாகப் பேசிய உதயநிதி மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT