Regional02

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 10.4 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி வட்டாட்சியர் மோகன்தாஸ் மற்றும் அலுவலர்கள், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்த ஓசூர் நோக்கிச் சென்ற லாரியை அலுவலர்கள் நிறுத்து மாறு சைகை காட்டினர். அலுவலர்களைக் கண்டதும், லாரியில் இருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் தப்பியோடினர். லாரியை அதிகாரிகள் சோதனை யிட்டதில், லாரியில் 10.4 டன் அரிசி கடத்தி செல்லப்பட்டது தெரிந்தது.

விசாரணையில், விழுப்புரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து லாரி மற்றும் அரிசியை கிருஷ்ணகிரி யில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

லாரி கிருஷ்ணகிரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT