சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் மன அழுத்தத்தை போக்க போலீஸாருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்த கிரிக்கெட் மற்றும் இறகுபந்து போட்டியை எஸ்பி தீபா காணிகர் தொடங்கி வைத்தார். போட்டிகள் இன்றும் (13-ம் தேதி) நடக்கிறது. இதில், ஆர்வத்துடன் போலீஸார் பங்கேற்றனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு நிறைவு விழாவில் எஸ்பி பரிசு வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்பி அன்பு, டிஎஸ்பி சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.