திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் மஜீதியா தெருவைச் சேர்ந்தவர் அப்துல்கனி(36), இவ ருக்கு திருமணமாகி, சில ஆண்டு களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில் அவருக்கும் அவரது உறவினரான ஒரு பெண் ணுக்கும் கூடாநட்பு ஏற்பட்டுள் ளது. இதுதொடர்பாக, அதே தெருவில் வசிக்கும் அந்தப் பெண்ணின் உறவினரான அஷ்ரப்அலிக்கும்(40) அப்துல் கனிக்கும் கடந்த டிச.27-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரை விட்டு அப்துல் கனி வெளியேறிவிட்டார், இந்நிலை யில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த அப்துல் கனியை அஷ்ரப் அலி அரிவாளால் வெட்டியதில் படு காயமடைந்த அப்துல் கனி அந்த இடத்திலேயே இறந்தார்.