Regional02

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ரூ.1.10 கோடியில் மருத்துவ உபகரணங்கள்

செய்திப்பிரிவு

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு ரூ.1.10 கோடியில் மருத்துவ உப கரணங்கள் வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி திட்டத் தின் கீழ் ரூ.1.10 கோடியில் மருத்துவ உபகர ணங்கள் வழங்க பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்திய நிறுவனத்துடன் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் புரிந் துணர்வு ஒப்பந்தம் நேற்று முன் தினம் கையெழுத் திடப்பட்டது. இதன்மூலம், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்ரீ“தானியங்கி நுண்ணுயிர் கண்டறிதல் உபகரணம், முழு தானியங்கி நோய் எதிர்ப்பு தடுப்பு உபகரணம், முழு தானியங்கி உறைநிலைபகுப்பாய்வு உபகரணம், கரோனா தடுப்பு நெறி முறை உபகரணங்கள், ஆர்டி பிசிஆர் பரிசோ தனை முடிவுகள் கருவிகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பராமரிப்பு உபகரணம், ஈசிஜிஇயந்திரம், சிறிய எக்ஸ்ரே இயந்திரம், ஜென ரேட்டர் போன்றவை வாங்கப்பட உள்ளன.

SCROLL FOR NEXT