தி.மலை அடுத்த வேங்கிக்காலில் பால் உற்பத்தியாளருக்கு போனஸ் தொகை வழங்கிய மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
Regional02

பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கல்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு போனஸ் தொகை வழங் கும் நிகழ்ச்சி தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துணை பதிவாளர் (பால்வளம்) விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் இளங்கோவன், துணை பொது மேலாளர் நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அதிமுக செயலாளர் குமாரசாமி வரவேற்றார். 93 உறுப்பினர்களுக்கு ரூ.3.37 லட்சம் போனஸ் தொகையை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலையில் ரூ.100 கோடியில் பால் பண்ணை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கும்” என்றார். இதில், ஆவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT