தி.மலையில் நேற்று நடந்த கல்லூரி வளாக தூதுவர்களுடன் ஆன்லைன் மூலம் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி. 
Regional03

கல்லூரி வளாக தூதுவர்களுக்கு ஸ்மார்ட் செல்போன் பரிசு தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் சிறப்பாக செயல்படும் கல்லூரி வளாக தூதுவர்களுக்கு ஸ்மார்ட் செல் போன் பரிசாக வழங்கப்படும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ‘கல்லூரி வளாக தூதுவர்கள்’ நியமிக்கப்பட் டுள்ளனர். அவர்களுடனான ‘ஆன் லைன்’ ஆலோசனை கூட்டம் ஆட்சி யர் சந்தீப் நந்தூரி தலைமையில் நேற்று நடைபெற்றது.

அப்போது அவர் பேசும்போது, “கல்லூரி வளாக தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தங்களது கல்லூரியில் படிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இணையதளம், கோட் டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சி யர்கள் மூலமாக வாக்காளர் பட்டி யலில் பெயர்களை சேர்க்கலாம். 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள், தங்கள் பெயர் களை சேர்க்க, இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பணியில் சிறப்பாக பங்கேற்று செயல்படும் கல்லூரி வளாக தூது வர்களுக்கு ஸ்மார்ட் செல்போன் பரிசாக வழங்கப்படும்" என்றார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கோட்டாட் சியர்கள் தேவி, ஜெயராமன், விமலா உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT