திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர். 
Regional02

திருப்பூரில் சிதிலமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மாவட்ட பொருளாளர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.ரவி, துணைச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாநகரம் முழுவதும் சாலைகள் தாறுமாறாக தோண்டி போடப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், பணிகள் முடிந்தும் சரிவர மூடப்படாததால் சிதிலமடைந்து காணப்படுகின்றன. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருக்கும் அந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை மாநகராட்சியிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT