Regional02

2 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு 2.45 மணி நேரத்தில் சென்ற ஆம்புலன்ஸ்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஜீவா- லட்சுமி தம்பதியருக்கு ஆரூரன் என்ற 2 மாத ஆண்குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற் பட்டது.

தனியார் மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், “குழந்தையின் இதயத்தில் வீக்கம் உள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறுவை சிகிச்சையை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் செய்ய முடியும். குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால், ஆம்புலன்ஸ் மூலம் விரைந்து செல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தமிழ்நாடு ஆல் டிரைவர்ஸ் அசோஷியேசன் மூலம்தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை 5.35 மணிக்கு தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாரத்தசாரதி குழந்தையுடன் ஆம்புலன்ஸில் புறப்பட்டார். 265 கிலோ மீட்டர் தொலைவை 2.45 மணி நேரத்தில்கடந்த ஆம்புலன்ஸ் காலை 8.20 மணிக்கு கோவை தனியார்மருத்துவமனையை சென்றடைந் தது. அங்கு குழந்தை அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பார்த்தசாரதியை அனைவரும் பாராட்டினர்.

SCROLL FOR NEXT