Regional02

கரோனா சிறப்பு நிதி திட்டத்தின்கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் மானிய நிதி உதவி

செய்திப்பிரிவு

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர், இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா சிறப்பு நிதி தமிழக முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதி உதவி தொகுப்பு திட்டத்தின் தொடர்ச்சியாக, திறன் பெற்ற இளைஞர்கள் 14 பேருக்கு தொழில் தொடங்க தலா ரூ. 1 லட்சம் வீதம் 14 லட்சம், 2 உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு 2-வது தவணையாக தலா ரூ.3 லட்சம் ஆகியவற்றை நேற்று ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.

இதில் ஊரக புத்தாக்கத் திட்ட துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட செயல் அலுவலர் முருகன், ஊரக சுய தொழில் பயிற்சி நிறுவன இயக்குநர் தனசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT