மதுரை அவனியாபுரத்தில் ஜன.14-ல் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது. இதில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பங்கேற்கிறார். இதற்கான பணிகளை திமுக பொறுப்பாளர்கள், செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி, பி.மூர்த்தி, எம்.மணிமாறன் ஆகியோர் மேற் கொண்டுள்ளனர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறி யதாவது: சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்கும் உதயநிதி, அவனியாபுரத்தில் அன்று நடக்கும் ஜல்லிக்கட்டைப் பார்க்கிறார். காளைகள் மற்றும் வீரர்களுக்குப் பரிசுகளை வழங்குவார். ஜன.19-ல் செக்கானூரணியில் நடக்கும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங் கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து செவ்வாய்க்கிழமை (இன்று) செக்கானூரணியில் புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ஸ்டாலின் கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க ஏற்பாடு நடக்கிறது என்றனர்.