ராமநாதபுரம் மாவட்டம் சோழா ந்தூர் அருகே வடவயலைச் சேர்ந்தவர் கருப்பையா(50). இவர் கடந்த 8-ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்றார்.
அப்போது பிச்சங்குறிச் சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதியதில் கருப்பையா உயிரிழந்தார்.
திருப்பாலைக்குடி போலீஸார் விசாரணையில் 17 வயது சிறுவனை அவரது பெரியப்பா தனபாலன்(49) தனது இரு சக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்தது தெரிய வந்தது. அதனையடுத்து தனபாலனை கைது செய்தனர்.
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை எந்த வாகனத் தையும் இயக்க பெற்றோர் அனுமதித்து விபத்தை ஏற் படுத்தினால் அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. இ.கார்த்திக் எச்சரித் துள்ளார்.