சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆட்சியர் ராமன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். 
Regional01

தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

செய்திப்பிரிவு

தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்து, பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி ஆட்சியர் ராமன் கூறியதாவது:

கரோனா தொற்று காரணமாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தொழிலாளர் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

மேலும், தொழிலாளர் துறையின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு சேலம் மாவட்டத்தில் 33,274 ஆண் தொழிலாளர்களுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம் மற்றும் 51,524 பெண் தொழிலாளர்களுக்கு சேலைகளும், 5,424 தொழிலாளர் ஓய்வூதியதாரர்களுக்கு பச்சரிசி, பருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவைகள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது.

மேலும், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 16 மையங்களில் நாளை (13-ம் தேதி) வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT