Regional02

21 மாத நிலுவை தொகையை வழங்க மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாதங்களுக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிருஷ்ணகிரியில் மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சொக்கநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தங்கராசன் வர வேற்றார். கூட்டத்தில், 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவிட்ட நிலுவைத் தொகை, மாநில அரசு மற்றும் வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. நிலுவையில் உள்ள 21 மாதங்களுக்கான தொகையை உடன் வழங்க வேண்டும்.

அரசாங்கத்தால் ஊழியர் களுக்கு வழங்கப்படும். பஞ்சப் படி 1.1.2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை, விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில, மத்திய அரசை கேட்டுக்|கொள்வது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனது பதவி காலத்தில் 60 வயது நிறைவு பெற்ற மூத்த குடிமக்களுக்கு பேருந்தில் இலவச அனுமதி வழங்குவதாக கூறியிருந்தார். அதை நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT