ஆரணி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. 
Regional02

பிங்க்ஸ் பள்ளியில் பொங்கல் விழா

செய்திப்பிரிவு

ஆரணி அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தாளாளர் ரமேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஜீனாபெட்ஸி வரவேற்றார். கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உரிஅடித்தல், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொங்கல் விழா குறித்து பள்ளியின் அறங்காவலர் வெங்கடேசன் பேசினார்.

நிகழ்ச்சியை சாலமன்ராஜ், மதன்ராஜ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், துணை முதல்வர் வெங்கடேசன் நன்றி கூறினார். 

SCROLL FOR NEXT