Regional02

ஆசிரியர்களுக்குரூ.26 லட்சம் கடனுதவி

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியஆசிரியர்கள் மற்றும் பணியா ளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில்ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் களுக்கு ரூ.26 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடன் சங்கத் தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலாளர் சரவணன் வரவேற்றார். ரூ.26 லட்சம் கடனுதவியை புதுப்பாளையம் யூனியன் தலைவர் சுந்தரபாண்டியன் வழங்கினார். இதில், புதுப்பாளையம் வட்டார கல்வி ஆலுவலர்கள் கண்ணன், சிராஜ், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT