குற்றச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில், 8 காவல் நிலையங்களுக்கு உட்பட 25 இடங்களில் பகுதி காவலர்களுக்கு புதிய கைபேசி மற்றும் செயலிகளை திருப்பூர் மாநகரக் காவல் ஆணை யர் ச.கார்த்திகேயன் வழங்கினார்.
திருப்பூர் மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், காவல்துறை சார்பில் பல்வேறு விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாநகரிலுள்ள ஒவ்வொரு காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளை மூன்று பகுதிகளாக பிரித்து,அதற்கென தனியாக பகுதி காவ லர்கள் மற்றும் காவலர்களுக்கென இருசக்கர வாகனம், கைபேசி மற்றும் கைபேசி செயலி வழங்கும் நிகழ்வு, சிறுபூலுவபட்டியில் நடந்தது.
திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், கைபேசி மற்றும் தனி செயலியை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநகர துணை ஆணையர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், உதவி ஆணையர் நவீன்குமார், காவல் ஆய்வாளர்கள் பிரகாஷ், மீனாகுமாரி உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பூர் தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட வெள்ளியங் காட்டில், மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் கைபேசி மற்றும் கைபேசி செயலி வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.