Regional01

ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி இளமங்கலம் ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம், படி பூஜை ஆகியவை அண்மையில் நடை பெற்றது.

இதையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம், கனகாபிஷேகம் ஆகியவை நடை பெற்றன.

தொடர்ந்து மாலையில், கோயில் நிர்வாகி தங்கராசு குருசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் படி பூஜை, புஷ்பாஞ்சலி நடை பெற்றது.நிகழ்ச்சியில், திட்டக்குடி அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் தலைவர் தங்கராசு, கடலூர்  ஐயப்ப சேவா சமாஜம் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருச்சி புத்தூர் குருப்ரசாத சபரி யாத்திரைக்குழுவை சேர்ந்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி குருசாமி தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT