Regional01

திருப்பனந்தாள்காசி மடத்தில்நிதி முறைகேடு

செய்திப்பிரிவு

ராமேசுவரம் திருப்பனந்தாள்  காசி மடத்தில் முன்னாள் மேலாளராக இருந்தவர் ரூ. 50 லட்சம் வரை முறைகேடு செய்ததாக புகாரின்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரத்தில் திருப்பனந் தாள்  காசிமடம் உள்ளது. இங்கு பக்தர்களுக்கான தங்கும் விடுதி, அன்னதானம் வழங்குதல் போன்றவை நடைபெற்று வரு கிறது. இம்மடத்தில் முன் னாள் மேலாளராக இருந்த சுப்பிரமணியன் என்பவர், விடுதியை வாடகைக்கு விட் டது, அன்னதானச் செலவு, ஜெனரேட்டருக்கு டீசல் செலவு உள்ளிட்டவற்றில் போலி கணக்கு மூலம் ரூ.50 லட்சம் வரை முறைகேடு செய்ததாக தற்போதைய மேலாளர் எம்.செல்வராஜ் ராமநாதபுரம் எஸ்.பி இ.கார்த்திக்கிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீ ஸார் முன்னாள் மேலாளர் சுப்பி ரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT