Regional02

இலவச அமரர் ஊர்தி சேவை ஆண்டு விழா

செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் இலவச அமரர் ஊர்தி சேவையின் 10-வது ஆண்டு நிறைவு விழா, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடைபெற்றது.

செஞ்சிலுவைச் சங்க அவைத் தலைவர் காஜாமுகைதீன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜகுரு வரவேற்றார். நலப்பணிகள் இணை இயக்குநர் சிவக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கோதை, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சுசீலாமேரி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT