எஸ்.பி ஆர்.னிவாசன் 
Regional01

அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டில் 80 பேர் குண்டர் சட்டத்தில் கைது எஸ்.பி ஆர்.னிவாசன் தகவல்

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் கடந் தாண்டு 80 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என மாவட்ட எஸ்.பி ஆர்.னிவாசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு 18 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் 21 பேரும், 34 கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 142 பேரில் 131 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்ஸோ சட்டத்தில் 38 வழக்குகள் பதியப்பட்டு 63 பேரும், 9 பாலியல் வழக்கு களில் 14 பேரும் கைது செய்யப்பட்டனர். 64 திருட்டு வழக்குகளில், 42 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ரூ.59.35 லட்சம் மதிப்பிலான பொருட்களில் ரூ.37.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப் பட்டன.

காணாமல் போனவர்கள் என 262 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 228 பேர் மீட்கப்பட்டனர். தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 80 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 1,92,233 பேர் மீது சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறியதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றார்.

SCROLL FOR NEXT