Regional01

மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடை பெற்றது. மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தென்காசி நகரச் செயலாளர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் சதன் திருமலைக்குமார், மதிமுக வளர்ச்சி நிதி வசூலிக்க ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடைச் சீட்டுகளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

கூட்டத்தில் மதிமுக வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதியாக தென்காசி மாவட்ட மதிமுக சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.

நிர்வாகிகள் மணியன், ராம உதயசூரியன், ஆறுமுகச்சாமி, செல்வசக்தி வடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். தென்காசி ஒன்றியச் செயலாளர் மணியன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT