Regional02

ஓய்வுபெற்ற பணியாளர் சங்க கூட்டம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது. மாநில பொருளாளர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் கிளைச் சங்க அவைத்தலைவர் வீரராகவன் வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன், மாநில தலைவர் சொக்கலிங்கம், மாநில செயலாளர் சந்திரசேகரன், திருச்செந்தூர் முதுநிலை கோயில் பணியாளர் சங்கத் தலைவர் செந்தில்குமார், கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தலைவர் பாலசுப்பிரமணிய குருக்கள், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் பேசினர். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணை பரிசாக ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் இறந்துவிட்டால் ஈமச்சடங்கு செலவாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூ.3 ஆயிரத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் குடும்ப ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT