Regional02

போகிப் பண்டிகை தினத்தன்று தூய்மை பணி செய்தால் சான்றிதழ் தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

‘தூய்மை தூத்துக்குடி’ திட்டத்தின் கீழ் போகிப் பண்டிகை அன்று தூய்மைப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது: மாவட்டத்தில் 13.01.2021 புதன்கிழமை அன்று போகிப் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் கூட்டம் நடத்தி, வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தூய்மைப் பணிகளை 13.01.2021 அன்று சிறப்பாக மேற்கொண்டு அதனை ‘தூய்மை தூத்துக்குடி' எனும் தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தகுந்த ஆதார புகைப்படத்துடன் வெளியிட வேண்டும். தூய்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்ட தனி நபர்கள், மகளிர் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சிறந்த ஊராட்சி, சிறந்த பேரூராட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சி வார்டு பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, 26.01.2021 அன்று தூத்துக்குடியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சான்றிதழ் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.

அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT