சாத்தான்குளம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். அரசூர் ஊராட்சி இடைச்சிவிளையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட பகுதி, தாமரைமொழி பகுதியில் இலவச பட்டா வழங்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கோப்புகளை ஆய்வு செய்து, 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கினார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா, சாத்தான்குளம் வட்டாட்சியர் லட்சுமி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜ், ஒன்றிய உதவி பொறியாளர் கார்த்திகேயன் உடனிருந்தனர்.