Regional02

பணம் வைத்து சூதாடிய 26 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்தவர், அப்பகுதியில் தனியார் சூதாட்ட கிளப் நடத்தி வந்துள்ளார். அங்கு, முறைகேடாக பணம் வைத்து விளையாடுவதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முறைகேடாக பணம் வைத்து விளையாடுவது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக தனியார் சூதாட்ட கிளப் பொறுப்பாளர் ராஜா உட்பட அங்கு விளையாடிக்கொண்டிருந்த 25 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், ரூ.ஒரு லட்சத்து 73420 பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT