திருப்பூர் அருகே சின்னக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் எஸ்.ரமேஷ்தலைமை வகித்து, செய்தியாளர்க ளிடம் நேற்று கூறும்போது, "இரண்டுநாட்கள் நடைபெற்ற மாநில பிரதிநிதித்துவப் பேரவையில் சங்கத்தின் கடந்த கால செயல்பாடு, ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நாடு முழுவதும் பல்வேறு சமூகப் பொருளாதார நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், கரோனா பரவலைத் தடுக்க அரசு கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வளர்ச்சி துறை ஊழியர்களின் பல்வேறு போராட்டங் களையடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதிய ளித்தது. ஆனால், இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதால் 1400 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை, வழக்குப் பதிவு செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என கோரப்பட்டது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 21-ம் தேதி மாநில அளவில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடத்துவது, அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 12-ம் தேதி சென்னையில் ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை இயக்குநரகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது" என்றார்.