Regional02

மனைவி பிரிந்த விரக்தியில் கணவர் தற்கொலை

செய்திப்பிரிவு

திருப்பூர் சாமுண்டிபுரம் ஈபி காலனியை சேர்ந்த தம்பதி பாண்டியராஜ் (27), சித்ரா (23). இவர் களுக்கு 5 வயதில் மகன் உள்ளார். சுமை தூக்கும் தொழிலாளியான பாண்டியராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தம்பதி இடையே கருத்துவேறுபாடு எழுந்தது. கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

பாண்டியராஜ் மாலை அணிந்து முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து, மாலையை கழற்றிவிட்டு மது அருந்தியதாக தெரிகிறது. மனைவி பிரிந்ததால் மன விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்பாக வீடியோ எடுத்து, அலைபேசியில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

இதைப் பார்த்த நண்பர்கள், தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டும் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து பாண்டியராஜின் வீட்டுக்கு வந்துள்ளனர். கதவு திறக்கப்படாமல் இருக்கவே உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூக்கில் தொங்கிய நிலை யில், அவரது சடலத்தை மீட்டனர்.

இதுதொடர்பாக 15 வேலம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT