அவிநாசி வட்டம் சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (42). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி செல்வி (36). இருவரும் பனியன் நிறுவனத் தொழிலாளர்கள். இவர்களின் மகன் சுந்தரபாண்டியன் (6). வழக்கம்போல நேற்று தம்பதி பணிக்கு சென்றிருந்த நிலையில், சிறுவன் வீட்டில் தனியாக இருந்துள்ளான்.
இந்நிலையில், வீட்டுக்கு எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையை கடந்தபோது, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயமடைந்தான். அப்பகுதியில் இருந்த விழுதுகள் தன்னார்வலர் அமைப்பின் சாரதா அளித்ததகவலின்பேரில், ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டு அவிநாசி, திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவைமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.