வெள்ளகோவில் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர்மயில்சாமி (39). இவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன், கும்பகோணம் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வெள்ளகோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
காரை ஓட்டி வந்த மயில்சாமி, அவரது மனைவி இந்து (37),உறவினர் கவுசல்யா (60) ஆகிய 3பேர், சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். இவர்களது சடலங்கள்,காங்கயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப் பட்டன.
மயில்சாமியின் மகன் கௌதம் (12), மகள் ரம்யா (10), தங்கை கலைவாணி (35) ஆகியோர் படுகாயங்களுடன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதுதொடர்பாக வெள்ளகோ வில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஓட்டுநர் கைது