விழுப்புரம் அருகே பெரிய செவலையில் அமமுகவினர் உதயநிதியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். 
Regional02

சசிகலா குறித்து இழிவாக பேசியதைக் கண்டித்து உதயநிதி உருவ பொம்மை எரிப்பு

செய்திப்பிரிவு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் அருகே உள்ள பெரிய செவலை கூட்டு ரோட்டில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து நேற்று அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரிய செவலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறி, உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து கோஷங் களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உதயநிதியின் உருவப் பொம்மையை தீயிட்டு கொளுத்தி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

சசிகலா குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT