Regional02

ராமகோபாலனுக்கு மணிமண்டபம் திருச்சியில் ஜன.25-ல் பூமி பூஜை இந்து முன்னணி தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்ட ஜன.25-ல் பூமி பூஜை நடைபெறும் என அந்த அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலனுக்கு, திருச்சியில் மணிமண்டபம் கட்டுவதற்காக வரும் 25-ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள ஆன்மிகவாதிகள், சமுதாயப் பெரியவர்கள், இந்து மக்களைச் சந்தித்து வருகிறோம். இந்து சமய அறநிலையத் துறைக்குப் பதிலாக தனி வாரியம் அமைக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர் தலில் மத மாற்றத் தடை, பசுவதைத் தடுப்பு, கோயில்களுக்கு தனி வாரியம் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும் கட்சிக்குத்தான் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT