Regional01

ஈரோட்டில் 545 கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு அக்ரஹாரத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமன விழா நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை தலைமை வகித்துப் பேசியதாவது:

போலீஸ் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் செயல்படுவர். ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஊருக்கும் தனியாக சிறப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர், செல்போன் எண்கள் போன்ற விவரம் அந்தந்த பகுதியில் உள்ள பலகையில் வைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலைய செல்போன் எண்கள், உயரதிகாரிகள் எண்களும் அதில் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு ஈரோடு மாவட்டம் முழுவதும் 545 விழிப்புணர்வு காவல் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முக்கிய பணி பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் குற்றத் தடுப்பு சேகரிக்கும் பணி தான்.

சிறப்பு அலுவலர்கள் தினமும் அந்தந்த பகுதி மக்களை சந்தித்து போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவர். குடும்ப பிரச்சினை, நிலத்தகராறு, காசோலை மோசடி என அந்தப் பகுதி மக்கள் என்ன பிரச்சினையாக இருந்தாலும் சிறப்பு அலுவலரிடம் கூறலாம். இதற்கு தீர்வு காணப்படும். இந்த திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.

ஈரோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜு, காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT