வேலாயுதம்பாளையம் அருகே கார் மோதி மொபட்டில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் ஆவாரங்காட்டுபுதூரில் உள்ள மகள் வீட்டுக்கு நேற்று மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். வேலாயுதம்பாளையத்தை அடுத்த அய்யம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது பெங்களூருவிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியதில் அந்த இடத்திலேயே ராமலிங்கம், மீனாட்சி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.