Regional01

காணாமல் போன 165 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்கள் குறித்து விசாரிக்க கோட்டை, கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டார்.

புகார்களில் குறிப்பிடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்களைக் கொண்டு ஆய்வு செய்து 165 செல்போன்களை மீட்டனர். அவற்றை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது உரியவர்களிடம் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் ஏ.பவன்குமார்(சட்டம் ஒழுங்கு), ஆர்.வேதரத்தினம் (குற்றம், போக்குவரத்து), கூடுதல் துணை ஆணையர் ரமேஷ்பாபு, மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT